Featured Posts

Thursday, April 7, 2011

உலக கோப்பை கிரிக்கெட் வரலாறு (1975)

1975-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி அறிமுகம் செய்யப் பட்டது. இங்கிலாந்தில் நடந்த அந்தப் போட்டியில் டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண் டீஸ், இந்தியா, பாகி ஸ்தான், நியூசிலாந்து ஆகிய 8 அணிக ளுடன் புதுமுக அணி களான இலங்கை, கிழக்கு ஆப்பி ரிக்கா பங்கேற்றன.

இந்த 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதின. 60 ஓவர்களை கொண்ட இந்தப் போட்டியில் லீக் முடிவில் இங்கி லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணி கள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

வெங்கட்ராகவன் தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 202 ரன்னில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவை 10 விக்கெட் வித்தியா சத்தில் (120 ரன் இலக்கு) தோற்கடித்தது. 3-வது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 4 விக்கெட்டில் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலியா 4 விக் கெட்டில் இங்கிலாந்தை வீழ்த்தியது. 2-வது அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட்டில் நியூசிலாந்தை வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா இறுதிப் போட்டியில் மோதின.

முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன் குவித்தது. கேப்டன் கிளைவ் லாயிட் 85 பந்தில் 102 ரன் (12 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்தார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 58.4 ஓவரில் 274 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் 17 ரன்னில் வென்று முதலாவது உலக கோப்பையை கைப்பற்றியது

0 comments:

Post a Comment